Thursday, October 20, 2011

வணக்கம்.

நினைத்த மாத்திரத்தில் ஒரு வலைப்பதிவு தொடங்கிவிட முடிகிறது. ப்ளாகருக்கு நன்றி சொல்லித் தொடங்குவதே தருமம்.

ட்விட்டரில் அடிக்கடி தமிழ் மொழி - இலக்கணம் சார்ந்த சந்தேகங்கள் நிறைய கேட்கப்படுகின்றன. நண்பர் இலவசக் கொத்தனார் தம்மால் முடிந்த அளவு கேட்கிற அத்தனை பேருக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார். சில சமயம் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். பெனாத்தல் சுரேஷ், சொக்கன் ஆகியோரும்ஓரளவு சந்தேகம் களையும் திருப்பணியில் ஈடுபடுவார்கள்..

நாங்கள் யாருமே தமிழறிஞர்கள் அல்லர். ஆனால் கூடியவரை பிழையின்றி,  இலக்கண துரோகமின்றித் தமிழ் எழுதவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். கற்றுத் தீராத கடலின் நிரந்தர , கரையோர சந்தாதாரர்கள்.

சந்தேகம் கேட்கும் நண்பர்களுக்கு எங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி வருகிறோம். ட்விட்டரின் துண்டெழுத்துப் பெருவெளியில் அவை கரைந்து காணாமல் போய்விடுகின்றனவே என்ற கவலையில் இன்று இந்தத் தளம் திறக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்கள் தமது மொழி-இலக்கணம் சார்ந்த சந்தேகங்களை இனி இங்கே கேட்கலாம்.  இது மற்றவர்களும் தேடிப்படிக்க உதவியாக இருக்கும். தெரிந்தவரை சந்தேகங்களைத் தீர்க்கப் பார்க்கிறோம். தெரியாதவற்றை, வல்லுநர்களிடம் கேட்டுத் தெளிவிக்கவும் முயற்சி செய்கிறோம்.

நம் மொழியை நாமே நாரடிக்கக் நாறடிக்கக் கூடாது என்று எண்ணுகிற அனைவருக்கும் நல்வரவு.

பாரா/

39 comments:

  1. வநக்கம். ஆரிண சோரு எணக்கு தாண்

    ReplyDelete
  2. //நாரடிக்கக்//

    ஐயோ..ஐயோ!

    ReplyDelete
  3. //நாரடிக்கக்// அப்படீன்னா என்னா சார்?!

    ReplyDelete
  4. நாறடிக்கவின் டைப்போ நாரடிக்க. நாற்றம் என்பது வேர்ச்சொல். நாற்றம் என்றால் மணம். துர்நாற்றம் என்பது கெட்ட மணம். ஆனால் பழகு தமிழில் இன்று நாற்றம் என்பதே துர்நாற்றம் என்பதாக மாறிவிட்டது. வாசனை என்பது இதற்கு இன்றைய எதிர்ச்சொல்.

    ReplyDelete
  5. ஆனால் துர்நாற்றம் என்பதற்குப் பதிலாக துர்வாசனை எனச் சொன்னால் பொருள் கன்னாப்பின்னாவென மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்!

    ReplyDelete
  6. //நாறடிக்கவின் டைப்போ நாரடிக்க//

    நாறடிக்க என்பது தெரியும். நாரடிக்க என்றால் தெரியாது. அதான் கேட்டேன்.

    அது ஏன் உங்களுக்கு நாறடிக்க என்று டைப்பும் போது அடிக்கடி நாரடிக்க என்று வந்து விடுகிறது?! ‘நாரடிக்க’ என்று கூகுளிட்டால் நீங்கள் தான் இருக்கிறீர்கள்! :)))

    ReplyDelete
  7. அப்பாடா.. உங்களோட முதல் பதிவிலேயே பிழை கண்டு பிடித்து நா’ர’டித்து விட்டேன். நிம்மதி! :)

    ReplyDelete
  8. ஷிஃப்டு போட்டு r அடிக்க சோம்பல். ஆதிமுதல் அது பழகிவிட்டது.

    ReplyDelete
  9. //ஷிஃப்டு போட்டு r அடிக்க சோம்பல். ஆதிமுதல் அது பழகிவிட்டது.//

    அவுட்சோர்ஸ் பண்ணிடுங்களேன்! :) ஒரு நம்பகமான டீம் இருக்குது. ரெக்கமெண்ட் பண்றேன்!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் or வாழ்த்துகள்:)

    ReplyDelete
  11. டேய் ஆயில்யா, அடி வாங்கப் போற!

    ReplyDelete
  12. கருத்துப்பெட்டியில் கருத்தினை பதிவு செய்கையில்,இடம்பெறும் or இடறும் வார்த்தை சரிப்பார்த்தல் வழக்கத்தினை மாற்றி வைக்கவும் !

    ReplyDelete
  13. மாயவரத்தான், ஆயில்யன் வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தாச்சு. புதிய இடைமுகத்தில் எங்க இருக்குன்னு தெரியாமல் தேடிக்கிட்டு இருந்தேன். கடைசியில் வெறுத்துப் போய் பழைய இடைமுகத்துக்கு மாறி இதைச் செய்ய வேண்டியதாப் போச்சு!

    ReplyDelete
  14. நல்ல முயற்சி. வாழ்த்துகள்

    ReplyDelete
  15. வாழ்த்துகள். சந்தேகங்களை இந்த தளத்தில் எங்கே கேட்க வேண்டும் என்பதே என் முதல் சந்தேகம்.

    ReplyDelete
  16. சத்யராஜ்குமார், இந்த சந்தேகத்தை எப்படிக் கேட்டீங்க? அதே மாதிரிதான். சும்மா ஒரு கமெண்டுப் போடுங்க. அம்புட்டுதேன்!

    ReplyDelete
  17. நான் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை (முடிவு எடுக்கும் அதிகாரம் அன்று என் கையில் இல்லை). அப்புறம் புத்தகங்கள், நாளிதழ்கள், வலைப்பதிவுகள் இன்ன பிற தரவுகள் எல்லாம் படித்து, இப்போ கொஞ்சமே கொஞ்சம் தமிழ் தெரியும். இந்தத் தளம் நிச்சயமா எனக்கு உதவியா இருக்கும். நன்றி. :)

    ReplyDelete
  18. எனது முதல் சந்தேகம். ன்,ண் எங்க போடனும்ன்னு கண்டுபிடிக்க எதாச்சும் சுலபமான வழி இருக்கா? இப்போ அந்த வார்த்தைய சொல்லிப் பார்த்து கண்டுப்பிடிக்கிறேன், ஆனாலும் சில இடங்களில் இடறி விடுகிறது. :(

    ReplyDelete
  19. பெயர்ச்சொற்களுக்கு அருகில் இணைந்தே வரவேண்டிய வேற்றுமை உருபுகளைத் தனியே போட்டுக் கழுத்தறுப்போரை என்ன செய்யலாம்? அதேபோலவே வினைச்சொற்களைக் கன்னாபின்னாவென்று உடைப்போரை என்ன செய்யலாம்?

    அவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்.

    அவன் இடம் கேட்டுத் தெரிந்து கொள்.

    செய்து கொண்டு இருக்கிறான் vs செய்துகொண்டிருக்கிறான்.

    ReplyDelete
  20. விஜய்,

    உச்சரித்துப் பாருங்கள். அதுதான் சுலபமான வழி. ஆனால் இன்றைக்குப் பலருக்கும் உச்சரிப்பில் பிழை இருப்பதால்தான் எழுத்துப்பிழைகளைச் செய்கிறார்கள்.

    அலை, அளை, அழை - மூன்றுமே தமிழ்ச் சொற்கள்தாம். ஆனால் அர்த்தமோ வேறுவேறு. இப்படி பொருள் தெரிந்து கொண்டால் எது வரவேண்டும் என்ற குழப்பம் இருக்காது.

    தவறும் பொழுது யாரேனும் சுட்டிக் காட்டினால் அதை குறை சொல்வதாக எடுத்துக் கொள்ளாமல் சொல்வதை மனதில் இருத்தி மீண்டும் செய்யாமல் இருக்கப் பாருங்கள்.

    ReplyDelete
  21. @Badri

    எப்பிடி எழுதுறதுன்னு கேட்டாங்கன்னா, கத்துக் கொடுக்கலாம். வேற என்ன பண்ண முடியும் அவங்கள. :)

    ReplyDelete
  22. பத்ரி,

    கருடபுராணடவுட்.ப்ளாக்ஸ்பாட்.காமில் கேட்க வேண்டிய கேள்வி! தவறி இங்கு வந்துவிட்டது போலும்! :)

    அவன் இடம், கேட்டுத் தெரிந்து கொள் என்றால் அவன் இடதுசாரி, வேண்டுமானால் அவனையே கேள் என்ற பொருள் வருகிறதே!

    செய்து கொண்டு இருக்கிறான் - அவன் வேலை வெட்டி ஒண்ணும் பார்க்கலை. கேட்டா புரட்சின்னு பேசுவான்.என்னமோ செஞ்சுக்கிட்டு அவனும் இருக்கான் என்ற சலிப்பான பேச்சோ?

    ரெண்டுமே சரியாத்தானே இருக்கு! :))

    ReplyDelete
  23. நன்றி கொத்தனார் சார்,
    ல, ள, ழ, மற்றும் ர,ற வித்தியாசம் இப்போ நல்ல கத்துகிட்டேன். "சொல்லிப் பார், புரிந்து கொள்" பார்முலா படி.
    இன்னும் இந்த னா, ணா இது மட்டும் தான் வர மாட்டேங்குது. இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்தா வந்திடும். அதுக்கு தான் எதாவது சுலபமான வழி இருக்குமான்னு பாத்தேன்.

    @பத்ரி

    அவர்களும் "சொல்லிப் பார், புரிந்து கொள்" பார்முலா பயன்படுத்தலாம்.

    ReplyDelete
  24. விஜய்

    நல்ல அகராதி ஒண்ணு வாங்கி வெச்சுக்குங்க!

    ReplyDelete
  25. நன்றி சார்.
    நல்ல தமிழ் அகராதியா நீங்களே பரிந்துரையுங்களேன். எனக்கும், இங்கு உள்ள, மற்றும் இங்கு வரப்போகிற மற்றவர்க்கும் உபயோகமா இருக்கும்.
    (எல்லாத்தையும் கேக்குறேன்ன்னு கோவிச்சுக்காதீங்க, இனிமே இங்க வர்ற எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.)

    ReplyDelete
  26. இனிய வாழ்த்துக்கள் இந்த நன்முயற்சிக்கு!

    துண்டெழுத்துப் பெருவெளியில் காணாமல் போகாமல், கல் மேல் எழுத்தென நிற்பதே நல்லது!
    தமிழிலே முயற்சியும் இப்படித் தான் ட்விட்டரில் முதலில் கரைந்து, பின்பு pulveli.com ஆக நிலை நின்றது!

    இந்த முயற்சியும், பல தமிழ் இணைகளை இணைத்து, தமிழ்ச் சொல்லறிவு மேம்பட உதவட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. இனிய வாழ்த்துக்கள் இந்த நன்முயற்சிக்கு!

    துண்டெழுத்துப் பெருவெளியில் காணாமல் போகாமல், கல் மேல் எழுத்தென நிற்பதே நல்லது!
    தமிழிலே "கிரந்தம் தவிர்" முயற்சியும் இப்படித் தான் ட்விட்டரில் முதலில் கரைந்து, பின்பு pulveli.com ஆக நிலை நின்றது!

    இந்த முயற்சியும், பல தமிழ் இணைகளை இணைத்து, தமிழ்ச் சொல்லறிவு மேம்பட உதவட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி சிறப்பானது. அப்டேடட் வர்ஷன் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். (அவ்வப்போதாவது எடுத்துப் புரட்டவும் வேண்டும்.)தினமும் 10 புதிய சொற்கள் என்னும் வழக்கத்தைக் கைக்கொண்டால் உபயோகமாக இருக்கும். நான் இதனைச் செய்கிறேன்.

    ReplyDelete
  29. @பாரா:
    நன்றி சார். சீக்கிரம் வாங்கிவிடுகிறேன்.
    தினமும் ஒரு சில வாக்கியங்கள் எழுதிப் பழகுகிறேன் (ஒரு A4 பக்கம் அளவு). கணினியில் எழுதாமல், கையில் எழுதிப் பழகுகிறேன், பின்பு இணையத்தில் சரி பார்க்கிறேன்.
    கணினியில் எழுதுவது சுலபமாகவும், தானாகவே பிழை திருத்திகொள்வதாகவும் இருக்கிறது. அதனால் கற்றுகொள்ள முடியவில்லை. (மனதில் நிற்கவில்லை). அதனால் கையில் எழுதிப் பழகுகிறேன்.

    ReplyDelete
  30. //நாங்கள் யாருமே தமிழறிஞர்கள் அல்லர்//

    இன்னொரு வேண்டுகோள்!

    நல்ல தமிழ்ச் சொற்களில், ஐயம் வந்தாலோ, விவாதம் எழும்பி - அவை சரி தானோ, அன்றித் தவறோ என்ற நிலை வருமானால்...

    அதை "தனிப்பட்ட கருத்தாக" முன்னிறுத்தாமல், தமிழறிஞர்களின் முன்னால் வைத்து, தெளிவு பெற்ற பின்பே பரிந்துரைக்க வேண்டுகிறேன்!

    இராம.கி ஐயா, நா.கணேசன், நாக. இளங்கோவன், டாக்டர் மு.இ போன்ற அறிஞர்கள் இணைய வெளியில் இருக்கின்றனர்! அவர்கள் உதவியைப் பெற்றே, "தெரிந்து தெளிதல்" எனச் செய்வது நலம் பயக்கும்!
    அவசரத்தில், நல்ல தமிழ்ச் சொற்களை, "அல்ல தமிழ்ச் சொல்" என்று தள்ளி விடாமல், மொழி வளம் (Vocabulary) will be preserved!

    நன்றி, இந்த முயற்சிக்கு!
    சொல்லி உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
    **தொழுது** படித்ததடி பாப்பா!

    ReplyDelete
  31. 1) http://crea.in/dictionary_1992.html - க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி (1992) பதிப்பு - இலவசமாக உபயோகிக்கலாம்.

    2) http://crea.in/akarathi.html - க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி (2008) பதிப்பு - இணையத்தில் வாங்க.

    @பாரா, இலவசகொத்தனார் மற்றும் பத்ரி :

    இதை நீங்கள் உங்கள் FBலோ, பதிவிலோ, ட்விட்டரிலோ பகிர்ந்தால், பலருக்கு உபயோகப்படும்.

    3) http://crea.in/jsp/dictionary-result.jsp?startwort=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&startword=aBkAkC&endwort=&endword=&encoding=ansi&submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%2F+Search&endwort1=&endwort2=&endwort3=

    அம்மா என்று நான் தேடியதற்கு கிடைத்த பதில்.

    ReplyDelete
  32. ஆகவே , எனவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

    ReplyDelete
  33. சுரேஷ் பிள்ளை: ஒரு நீண்ட விளக்கத்தின் இறுதியில் sum upஆகச் செய்து நாலு வரியில் சொல்லும்போது ஆகவே பயன்படும். எனவே என்பது உடனடிச் சுட்டிக்காட்டுதல்களுக்கு உதவும்.

    உதா:
    1. ஆகவே வாக்காளப் பெருமக்களே, தப்பித்தவறி எனக்கு வாக்களித்துவிடாதீர்கள். நான் தொகுதிப் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்பதை மீண்டும் மீண்டும் உங்கள்முன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    2. எனவே இவருக்கு வோட்டளிக்காதீர்கள்!

    ReplyDelete
  34. வாழ்த்துகள் ;- எனக்குச் சொன்னேன்.

    வாசகர் சந்தேகம் கேட்கவும் ஒரு பெட்டியை ஓரத்தில் திறந்துவிடலாமே.

    ReplyDelete
  35. எனக்கு ஒரு சந்தேகம்

    சேறில் சேற்றில் எது சரி? சேற்றில் என்றால் ஏன் அப்படி?

    ReplyDelete
  36. அதிஷா

    சேறு என்ற சொல்லோடு இல் விகுதி சேரும் பொழுது ஒற்று இரட்டித்து சேற்றில் என்றே ஆகும். சேற்றில் என்பதே சரி. ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பதிலும் ஆறு+இல் என்பது ஆற்றில் என்றாகும். ஆறு என்பது எண்ணைக் குறிக்கும் பொழுது ஆறு+இல் என்பது ஆறில் என மாறும். ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா என்பது போல.

    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  37. கொத்ஸ் பதில் சொன்னதும் டுவிட்டர்ல ஒரு அட்டு போட்டுட்டா வந்து பாக்க யூஸ்புல்லா இருக்கும்ல ;-)

    ReplyDelete
  38. Smart Card (புதிய வகை ரேஷன் கார்டு) என்ற சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் என்ன..?

    ReplyDelete